விராலிமலை,மே 27: விராலிமலை அருகே இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவை, கிராமத்தினர் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள வில்லாரோடையைச் சேர்ந்தவர் விவசாயியான கோபால் தங்கா தம்பதியினர் பசு, ஆடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இவர் வளர்ந்து வந்த செல்லபிள்ளை லட்சுமி என்ற பெயர் கொண்ட நாட்டு வகை பசு நேற்று காலை இரண்டு காளை கன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பசு மற்றும் கன்று குட்டிகளை பார்த்துச் சென்றனர்.