விராலிமலை,ஆக.17: விராலிமலை அடுத்துள்ள மேலபச்சக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விராலிமலை தனியார் காற்றாலை உற்பத்தி நிறுவனம் சார்பில் புத்தக பை வழங்கப்பட்டது. விழாவிற்கு மேலபச்சக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி சுப்ரமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் குமார் சுப்ரமணி முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சென்வியன் காற்றாலை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் மனிதவள முதுநிலை மேலாளர் சரவணன், அட்மின் ஷேக் மற்றும் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறையின் செப்பர்டு முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன், பாலாஜி கேட்டரிங் நிறுவனர் சுப்ரமணியன், பனைமரத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் ராஜசேகர், கணேசன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மேலப்பச்சக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவி மற்றும் கர்ப்பிணிகள் எடை சோதிக்கும் கருவி, இதயத்துடிப்பு கருவி, மின் விசிறி வழங்கப்பட்டது. முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் சுதா ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் பழனிவேலு தொகுத்து வழங்கினார்.முடிவில் ஆசிரியர் வள்ளி நன்றி கூறினார் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.