விராலிமலை, ஜூன் 3: விராலிமலை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விராலிமலை அடுத்துள்ள கல்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்குடி மேலத்தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி பழனியம்மாள்(45) என்பவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
விராலிமலை அருகே புகையிலை பொருள்கள் விற்ற பெண் கைது
0