விராலிமலை, செப். 14: விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது. விராலிமலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி திட்டம் மூலம் நடைபெற்ற விழாவில் ரத்தசோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்தும் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தேசிய ஊட்டச்சத்து மாத உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். மேலும் மாணவிகளிடையே கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில் விராலிமலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி திட்ட பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
விராலிமலை அரசு பெண்கள் பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா உறுதிமொழி ஏற்பு
previous post