விராலிமலை,ஆக.30: விராலிமலையில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்ட, திமுக சார்பில் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் தேர்தலில் பணியாற்றி வெற்றியை தேடிதந்த தொண்டர்களை மகிழ்விக்கவும் திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் அய்யப்பன் ஏற்பாட்டில் விராலிமலை தனியார் மண்டபத்தில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் பேசும்போது, தேர்தலில் முழு வேகத்துடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றும் விராலிமலை தொகுதி மட்டும் கை நழுவியது நம் பணியின் தொய்வையும் ஒற்றுமையின்மையையும் காட்டுவதாக உள்ளது. இந்நிலை தொடர தொண்டர்கள் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் விராலிமலை தொகுதி திமுக வசம் ஆக்க வேண்டும் என்று நாம் உறுதியுடன் ஒற்றுமையுடன், செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மணி, மாவட்ட கழக அமைத்தலைவர் வீரமணி, மாவட்ட பொருலாளர் லியாகத் அலி, மாவட்ட துணைச்செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி தங்க சிங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். மத்திய ஒன்றிய அவைத்தலைவர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.