மதுரை, ஜூலை 2: வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் பூர்வீக ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு வாயிலாக பாசன வசதி பெறும் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பெரிய கண்மாய், ஏனாதி கோட்டை கண்மாய், குடீயூர் கண்மாய், மரிச்சுகட்டி மற்றும் வன்னிக்குடி கண்மாய்கள் ஆகியவற்றுக்கான நீர்வரத்து குறித்து, கீழ்வைகை வடிநிலகோட்ட கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜ், சருகனியாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம், விரகனூர் மதகணையில் துவங்கிய இந்த ஆய்வில், அணையிலிருந்து தண்ணீர் சீராக வெளியேற்றப்படுகிறதா என்பது குறித்தும், கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மற்ற பகுதிகளுக்கும் தண்ணீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யும் நடவடிக்கை குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.