சேலம், ஆக.3: சேலம் கன்னங்குறிச்சி அடுத்த விநாயகம்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தி (65). இவர் நேற்று தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், திடீரென தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘விநாயகம்பட்டியில் டெலிபோன் காலனி பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு சுமார் 1,000 சதுர அடி நிலத்தை வாங்கினோம். தற்போது அங்கு மளிகை, இட்லி கடை நடத்தி வருகிறோம்.கடந்த 2015ம் ஆண்டு மணக்காடு பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர், நாங்கள் குடியிருந்து வரும் நிலத்திற்கு, ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும், இந்த இடம் தனக்கு தான் சொந்தம் எனவும் கூறி, வழக்கும் தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் மற்றும் அந்த பெண் தரப்பினர் வந்து, நாங்கள் குடியிருந்து வரும் இடம் தனக்கு தான் சொந்தம் எனக்கூறி, கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றி விட்டனர். தற்போது நாங்கள் வசிக்க இடமின்றி தவிக்கிறோம். எனவே எங்கள் வீட்டை மீட்டுத்தரவேண்டும்,’’ என்றனர்.
வியாபாரி குடும்பத்துடன் தர்ணா
previous post