பேரணாம்பட்டு, ஜூன் 10: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் உள்ள வியாபாரிகளுக்கு இன்று தொழில் வரி விதிப்பு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. எனவே பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தொழில் வரி விதிப்பு செய்திட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே பேரணாம்பட்டில் இருக்கும் வியாபாரிகள் தங்களுடைய ஆதார் அட்டை, பான்கார்டு, வீட்டு வரி ரசிது கொண்டு வந்து பதிவு செய்பவர்களுக்கு உடனே தொழில் வரி விதிப்பு செய்து தரப்படும் என்று பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.