தேன்கனிக்கோட்டை, ஜூன் 26: தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில், நடைபாதை வியாபாரிகளுக்கு, கடை வழங்குவதில் இருதரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டதால், டிஎஸ்பி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் எதிரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு, ரூ.1000 என்ற வாடகையில், இரும்பு தகரத்தாலான 20 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர், பேரூராட்சி சார்பில் அமைத்திருந்த 2 கடைகளை அகற்றி, தாங்களாகவே கடை அமைத்து வருகின்றனர்.