குற்றாலம் பகுதி வியாபாரிகள் கூறுகையில், ‘குற்றாலத்தில் சீசன் என்பது 90 நாட்கள் மற்றும் ஐயப்ப சீசன் காலம் 60 நாட்கள் ஆகும். வருடம் முழுவதும் சீசன் இல்லை. இந்த குறுகிய காலத்தில் வருகின்ற சுற்றுலா பயணிகளின் கூட்டத்தில் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து தான் நாங்கள் ஒரு வருட பராமரிப்பு செலவை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
கொரோனா காலம் தவிர்த்து இதுபோன்று தொடர்ச்சியாக 5 தினங்கள் மற்றும் வார கணக்கில் தடை விதிக்கப்படுவது பெரும்பாலும் இல்லை. ஏதேனும் ஒன்றிரண்டு அருவிகளில் தடை விதிப்பார்கள். ஆனால் தற்போது அனைத்து அருவிகளிலும் 24 மணி நேரமும் தடை விதித்து விடுகிறார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது’ என்றனர்.