சிவகங்கை, ஜூன் 11: வியர்வை நாற்றத்தை தவிர்க்க வழி இருப்பதாக சித்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: வெயிலின் காரணமாக மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. வியர்வை மற்றும் வேனிற்கட்டி வருவதை தடுக்க சீரகம் 5 கிராம், தேங்காய் பால் 100 மில்லி அரைத்து உடலில் தேய்த்து 2 மணிநேரம் கழித்து வாரம் இருமுறை குளித்தால் சரியாகி விடும். அக்குல் நாற்றம் போக கண்டங்கத்திரி இலைச்சாறு 50 மில்லி, நல்லெண்ணெய் 50 மில்லி காய்ச்சி வடிகட்டி உடலில் தேய்த்து குளித்தால் சரியாகி விடும்.
உடலில் வியர்வை நாற்றம் போக பச்சை கோரை கிழங்கு அரைத்து சாறு எடுத்து உடம்பில் பூசி குளித்தால் சரியாகி விடும். தலை அரிப்பு மற்றும் பொடுகு தொல்லைகளில் இருந்து தப்பிக்க ஆவாரம்பூ 10 கிராம், பாசிப்பயிறு 10 கிராம் அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பிரச்னை சரியாகி விடும். இவ்வாறு கூறினார்.