பரமக்குடி,ஜூலை 19: சிவகங்கை மாவட்டம் குனப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று நண்பர் மணிகண்டனுடன் கல்லூரி முடிந்த பின்பு டூவீலரில் தெய்வேந்திரநல்லூர் அருகே வந்தபோது, முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி சென்றுள்ளார். அப்போது, காரில் மோதியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுபோல் இளையான்குடி தாலுகா கரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(21). நேற்று மாலை டூவீலரில் ராமநாதபுரத்திற்கு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பொட்டிதட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.