பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 28: பொம்மிடி அம்பாளப்பட்டியைச் சேர்ந்தவர் குமார்(47). இவர் தனது டூவீலரில் பொம்மிடி பஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த குமாருக்கு காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து சென்ற கார் அடுத்துவந்த வாசிகவுண்டனூர் பகுதியை சேர்ந்த ரவி(45), கோபால்(50) ஆகியோர் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் ஒட்டி வந்த ஸ்கூட்டர், காரின் பக்கவாட்டு பகுதியில் சிக்கி இழுத்துச்சென்றது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற பொம்மிடியை சேர்ந்த பூமா(45) என்பவர் மீது காரில் மாட்டியிருந்த ஸ்கூட்டர் மோதியது. இதில் அவர் கீழே விழுந்து காயமடைந்தார். காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குபதிவு செய்து, பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.