போடி, நவ. 22: போடி அருகே சிலமலையை சேர்ந்த கண்ணன் (37), லேத் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மே மாதம் திருப்பூருக்கு காண்ட்ராக்ட் வேலைக்கு சென்றவர், அங்கு பணியின்போது கால் தவறி விழுந்து பலியானார். இதனால், இவரது மனைவி கார்த்திகா தனது 10 மாத குழந்தையுடன் சிரமத்திற்குள்ளாகினார். இவ ர்தி கிரீன் லைப் பவுண்டேசனில் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், தி கிரீன் லைப் பவுண்டேசன் சார்பில் கண்ணன், கார்த்திகா தம்பதியரின் மகள் பெயரில் செல்வமகள் திட்டத்தில் ரூ.61,000 நிதி வங்கியில் செலுத்தப்பட்டது. அந்த பத்திர பாஸ் புத்தகத்தை பவுண்டேசன் தலைவர் நம்பிக்கை நாகராஜ் கார்த்திகாவிடம் வழங்கினார். அப்போது செயலாளர் சுந்தரம், உறுப்பினர்கள் சேகர், அர்ச்சுனன், ஜெயப்பிரகாஷ், போடி அமானுல்லா, பசுமைப் பங்காளர் அமைப்பின் நிறுவனர் முருகன் உடனிருந்தனர்.