தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ஆலமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குழந்தை சாமி. இவரது மகன் சக்திவேல் (23). கூலி தொழிலாளி. இவரது நண்பர் மூர்த்தி (22). இவர்கள் இருவரும் டூவீலரில் வேலை விஷயமாக தர்மபுரிக்கு சென்றனர். நல்லம்பள்ளி அருகே மணலூர் கொப்பக்கரை பக்கம் சென்ற போது, சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேல் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இவ்விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.