ராமநாதபுரம், ஆக.1: ராமநாதபுரம் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில், இரண்டு வாலிபர்கள் பலியாகினர். ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை சேது நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் தயாநிதி(22). இவர், டிரம்ஸ் செட் அடிக்கும் தொழிலுக்கு தேவிபட்டினம் சென்றுவிட்டு நேற்று முன்தினம் டூவீலரில் ராமநாதபுரம் திரும்பிக் கொண்டிருந்தார். தயாநிதியின் வாகனத்தில் பனைக்குளம் சோகையன் தோப்பைச் சேர்ந்த ராஜவேல் மகன் ராஜசூரியா(22) என்பவரும் வந்தார். பேராவூர் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த தயாநிதி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜசூரியா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலி
50
previous post