சூளகிரி, ஆக.27: சூளகிரி ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, விநாயகர் சிலைகளை வாங்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சூளகிரி-ஓசூர் சாலையில் உள்ள விநாயகர் சிலை விற்பனை கடைகளில் விநாயகர் சிலைகள் பல மாடல்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் 1 அடியில் இருந்து 8 அடி வரை உள்ளது. சிலைகளை வாங்கி செல்ல இப்போதிருந்தே ஆர்டர் கொடுத்து புக்கிங் செய்து வருகின்றனர்.
விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்ய ஆர்வம்
previous post