புதுக்கோட்டை, செப். 11:புதுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் டவுன் டிஎஸ்பி ராகவி தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆயுதப்படை மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு டவுன் டிஎஸ்பி ராகவி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி விழா குறித்த அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிலை 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவா்கள் மற்றும் ஊா்வலம் நடத்தியவா்களுக்கு மட்டும், இந்த ஆண்டு சிலை வைக்கவும், ஊா்வலம் நடத்தவும் அனுமதி வழங்கப்படும். சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் விசர்ஜனம் செய்ய வேண்டும்.தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.