திருவள்ளூர், செப். 3: விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் நடத்திய ஆய்வு கூட்டத்தில் அறிவுரை வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இதில், வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும், விநாயகர் சிலைகள் நிறுவுதல், வழிபடுதல் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறிக்கும், அரசாணை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னதாக கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.நிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், பொன்னேரி சப் கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளூர் ஏ.கற்பகம், திருத்தணி தீபா, உதவி கலால் ஆணையர் ரங்கராஜன், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) செல்வம், நகராட்சி ஆணையர்கள் திருவள்ளூர் ஏ.திருநாவுக்கரசு, பூந்தமல்லி ஆர்.லதா, திருத்தணி அருள், திருவேற்காடு தட்சிணாமூர்த்தி, பொன்னேரி கோபிநாத், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெ.பிரவின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.