திங்கள்சந்தை, செப். 22: இரணியல் சுற்று வட்டார கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது. இரணியல் வள்ளி ஆற்றின் கரை செல்வராஜ கணபதி கோயிலில் நடந்த விழாவில் உற்சவர் சிலையை அலங்காரம் செய்து வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று இரணியல் மேலத்தெரு சித்தி விநாயகர், கீழத்தெரு சிங்க ரட்சக விநாயகர், பட்டாரியர் தெரு, ஆசாரித்தெரு, செக்காலத்தெரு உட்பட சுற்று வட்டார கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வருகிற 24ம் தேதி குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் திங்கள்நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மண்டைக்காடு கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்கதர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும் செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இரணியலில் சுவாமி வீதி உலா
95
previous post