ஈரோடு, செப். 3: விநாயகர் சதுர்த்தியையொட்டி சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் நேற்று மூட்டை ஒன்றுக்கு ரூ.30 விலை உயர்ந்து காணப்பட்டது. ஈரோடு அடுத்துள்ள சித்தோடு வெல்லம் மார்க்கெட் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,000 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது.
ஒரு மூட்டை ரூ.1,250 முதல் ரூ.1,320 வரை விற்பனையானது. உருண்டை வெல்லம் 4,200 மூட்டை வரத்தான நிலையில், ஒரு மூட்டை ரூ.1,270 முதல் ரூ.1,370 வரை விற்பனையானது. அச்சு வெல்லம் 900 மூட்டை வரத்தான நிலையில், ஒரு மூட்டை ரூ.1,270 முதல் ரூ.1,370 வரை விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி விரைவில் வர உள்ளதையடுத்து கடந்த வாரத்தைவிட வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து அதிகரித்திருந்ததோடு, விலையும் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை மூட்டை ஒன்றுக்கு சராசரியாக ரூ. 30 வரை விலை உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.