நாமக்கல் ஆக.18: நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன் ஆகியோர் நல்லிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது, விதிமுறை மீறி இயக்கப்பட்ட 22 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நோட்டீஸ் வழங்கினர். தகுதி சான்றிதழ் புதுப்பிக்காத வாகனங்கள், அளவுக்கு அதிகமாக சரக்கு ஏற்றிய வாகனங்கள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியவர்கள், ஹெல்மெட் அணியாமல் டூவீலர்கள் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ₹67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விதிமுறை மீறி இயக்கிய 3 வாகனங்கள் பறிமுதல்
previous post