ஆரணி, அக்.17: ஆரணி சப்-டிவிஷனில் குற்றசம்பவங்களை தடுக்க இரவில் நடந்த வாகன சோதனையில், விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 878 பேர் மீது வழக்குப்பதிவு, 118 வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆரணி சப்-டிவிஷன் உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த 12ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை விடிய விடிய போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், ஆரணி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஆரணி டவுன், தாலுகா, களம்பூர், கண்ணமங்கலம், சந்தவசால் ஆகிய பகுதிகளில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், சுப்பிரமணி, மகாலட்சுமி, அல்லிராணி மற்றும் போலீசார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த கனரக வாகனங்கள், கார், பைக், பஸ் உள்ளிட்டவைகளை சோதனையிட்டனர். மேலும், வாகன சோதனையில் ஓவர் ஸ்பீடு, வித் அவுட் லைசன்ஸ், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்கள், வித் அவுட் நம்பர் பிளேட் உட்பட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆரணி சப்-டிவிசனுக்குட்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களில் இரவில் நடந்த வாகன சோதனையில் வீதிமுறை மீறிய 878 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விதிமுறைகள் மீறி வாகனம் ஓட்டிய 878 பேர் மீது வழக்குப்பதிவு 118 வாகனங்கள் பறிமுதல் ஆரணியில் இரவில் நடந்த வாகன சோதனையில்
previous post