Tuesday, March 5, 2024
Home » விதிமுறைகளை பின்பற்ற தவறிய 54 கடைகள் மீது நடவடிக்கை தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தேசிய விடுமுறை தினத்தன்று

விதிமுறைகளை பின்பற்ற தவறிய 54 கடைகள் மீது நடவடிக்கை தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தேசிய விடுமுறை தினத்தன்று

by Dhanush Kumar

திருவண்ணாமலை: தேசிய விடுமுறையான குடியரசு தினத்தன்று, விதிகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 54 கடைகள் மற்றும் தமிழில் பெயர் பலகை வைக்காத 8 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.சாந்தி தெரிவித்திருப்பதாவது: தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின்படி தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி, அந்த தினத்தில் பணியில் ஈடுபடுத்தினால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிப்பு அளித்து, அவர்களின் அனுமதி பெற்று பணியில் ஈடுபடுத்த வேண்டும். எனவே, தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

11 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi