ஓசூர், ஆக.31: ஓசூர் பகுதியில் பொது இடங்களில் அனுமதியின்றி வைத்திருந்த பேனர்கள் மற்றும் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஓசூர் மாநகர் பகுதியில் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான சுவர்களில், போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் உத்திரவின்பேரில், நேற்று நகர் முழுவதும் அனுமதியின்றி வைத்திருந்த கோயில் விழாக்கள், திருமணம் வரவேற்பு, பிறந்தநாள் வாழ்த்து, கடைகள் விளம்பரம் உள்ளிட்ட 209 பேனர்கள் மற்றும் 206 இடங்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அனுமதியின்றி போஸ்டர் மற்றும் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விதிமீறி வைத்திருந்த பேனர்கள் அகற்றம்
previous post