திருப்பூர், ஆக.5: உணவகங்களில் விதிமீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப்படும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:உணவகங்களில் உணவு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் இறைச்சிக்கு உரிய ரசீது வைத்திருக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள் சரியான முறையில், சரியான வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும். அசைவ மற்றும் சைவ உணவுப்பொருட்கள் தனித்தனியாக குளிர்சாதனப் பெட்டியில் பராமரிக்கப்பட வேண்டும்.
சமைத்த அசைவ மற்றும் எநத உணவும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்க அனுமதி இல்லை. உணவகங்களில் பணிபுரிபவர்கள் அவசியம் தலைக்கவசம், முகக்கவசம் அணிந்திருக்க வே்ணடும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உணவு பொருட்களை பொட்டலமிடுவதை தவிர்க்க வேண்டும். பழைய பேப்பர்களை பயன்படுத்தி சூடான உணவு பொருட்களை பாதுகாப்பது விதிமுறைகளை மீறும் செயலாகும். இதுதொடர்பாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிய குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றனர்.