அருப்புக்கோட்டை, மே 19: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிக பயணிகளை பொதிமூட்டைகள் போல ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மாவட்டத்தில் அதிகளவில் இயங்கி வருகின்றன. பயணிகள் கைநீட்டும் இடத்தில் எல்லாம் நின்று அவர்களை ஏற்றிச் செல்கின்றன.
இத்தகைய ஆட்டோக்களில் டிரைவர் சீட் தொடங்கி, பயணிகள் அமரும் இடத்தில் மூன்று பயணிகளுக்கு பதிலாக பத்து வரையிலான பயணிகளை அமரச் செய்கின்றனர். இது போதாதென்று, ஆட்டோவின் பின்புறம் சரக்கு வைத்துக் கொள்வதற்காக இருக்கின்ற இடத்திலும், சுமார் 4 பேரை அமர வைத்துக்கொண்டு பொதிமூடைகளை ஏற்றிச் செல்வது போல பயணிக்கின்றன.