கறம்பக்குடி, செப். 1: கறம்பக்குடி தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்தோர் இல்லங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ண்ணா பிறந்த நாளான செப்.15 கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்க பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படி கறம்பக்குடி தாலுகாவில் 30,000 க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரியானதா என்பது குறித்து கடந்த 25ம் தேதி முதல் அதற்குரிய அலுவலர்கள் அனைத்து கிராமங்களுக்கும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். தனடிப்படையில் கறம்பக்குடி, மழையூர் போன்ற அனைத்து பகுதிகளிலும் தாலுகா தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் செல்வராசு கள ஆய்வு செய்தார்.
மேலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பணிகளை செவ்வனே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.