மதுரை, மே 18: மதுரை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் 2ம் ஆண்டு நேரடி மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதன்படி பாலிடெக்னிக்கில் சேர விரும்பும் மாணவிகள் www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். சிவில், இசிஇ, ஜெசிஇ, கணினி இன்ஜினியரிங், கார்மென்ட் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதோர் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாமாண்டு ேசர்க்கைக்கு மே 20ம் தேதிக்கு முன்பாகவும், முதலாமாண்டு சேர்க்கைக்கு மே 24க்கு முன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0452 2679940, 9710938012 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பாலிடெக்னிக் முதல்வர் (பொ) அமுதா தெரிவித்துள்ளார்.