Sunday, April 14, 2024
Home » விடைத்தாள் திருத்தும் பணி வரும் 1ம் தேதி தொடக்கம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின்

விடைத்தாள் திருத்தும் பணி வரும் 1ம் தேதி தொடக்கம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின்

by Karthik Yash

வேலூர், மார்ச் 12: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 1ம் தேதி முதல் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ்2 பொது தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. வரும் 19ம் தேதி முடிய உள்ளது. பிளஸ்1 தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி வரும் 21ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரையும் நடக்கிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்குள் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை முடிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8ம் தேதியுடன் முடிவு பெறவுள்ளன.

இந்நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர்வு துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரையும் திருத்துதல் நடைபெற உள்ளது. இவை நிறைவு பெற்றதும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும், 10ம் வகுப்புக்கு மே 10ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

eleven + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi