வேலூர், ஜூன் 5: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பொய்கையை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில், `கடந்த ஆண்டு வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர், எனக்கு அறிமுகமானார். அவர் சில லட்சங்களை கொடுத்தால் விடுதி வார்டன் பணியை வாங்கி தருவதாக கூறினார். அதன்படி சில தவணைகளாக சுமார் ரூ.4 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித்தரவில்லை. பணம் கேட்டால் தட்டிக்கழித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சோழவரத்தை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில், கள்ளத்தனமாக மது விற்ற வழக்கில் என்னை போலீசார் கைது செய்து எனது வங்கி கணக்கை முடக்கினர். தற்போது திருந்தி வாழ விரும்புகிறேன். எனவே முடக்கப்பட்ட எனது வங்கி கணக்கை என்னிடம் ஒப்படைக்கவேண்டும். காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த பெண் அளித்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் எனது வீட்டின் பூட்டு உடைத்து 22 சவரன் மற்றும் பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து விருதம்பட்டு ேபாலீசார் வழக்குப்பதிந்தனர். ஆனால் இதுவரை எனது நகை மற்றும் பொருட்கள் மீட்கப்படவில்லை.
விடுதி வார்டன் வேலை ஆசைகாட்டி ரூ.4லட்சம் அபேஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் வேலூர் அருகே
0