அரியலூர், ஆக. 18: அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் பிறந்த நளையொட்டி, அரியலூர் காமராஜர் ஒற்றுமைத் திடலில் தொடங்கிய பேரணியானது, திருச்சி சாலை, கடை வீதி, பேருந்து நிலையம் வழியாக வந்து அம்பேத்கர் சிலை முன்பு நிறைவடைந்தது. பின்னர் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அங்கனூர் சிவா தலைமையில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.காவல்துறையினர் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்