திருப்பூர், ஆக. 6: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளராக இருந்தவர் காளிகா தேவி. இவர் கடந்த மே மாதம் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மரணத்தில் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று திருப்பூர் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார். காளியா தேவியின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் பார்வேந்தன்,கோவை,நீலகிரி மண்டல செயலாளர் கலையரசன்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி,மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.