செய்யாறு, ஜூலை 12: செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று அதிகாலை வரையில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சில தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணிவரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம்: செய்யறு 15 மி.மீ., வெம்பாக்கம் 58 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. கடந்த சில நாட் களாக பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில்
54