நாகர்கோவில், செப்.7: விஜய்வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். விக்ன விநாயகப் பெருமான் எல்லாத் தடைகளையும் நீக்கி வரங்களைத் தருவாராக. உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகி வாழ்வில் வெற்றி பெருக வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி உங்கள் இல்லங்களில் நிறைய பிரார்த்திக்கிறேன். விநாயகப் பெருமான் உங்கள் உறவில் அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பொழிவாராக. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.