ஆரணி: ஆரணியில் நடந்த விஜய் பிறந்தநாள் ஊர்வலத்தில் தவெக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் வடக்கு மாவட்ட செயலர் சத்தியா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தவெக கட்சியின் உறுப்பினரும், ஓவியருமான ஹரிஸ்(45), திடீரென அங்கு வந்து தான் விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியாக இருந்து வருவதாகவும், எனக்கு எதற்கு நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ஊர்வலமாக சென்ற தவெக கட்சி மாவட்ட செயலாளரை திடீரென தடுத்து நிறுத்தி பேசியபோது, ஹரிஸ்யை, அவர் தள்ளிவிட்டதால், ஆத்திரமடைந்த அவர் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஹரிஸ்சிடம் பேச்சு நடத்தினர். பின்னர் நீண்டநேரம் தகராறில் ஈடுபட்ட ஹரிஷ் அங்கிருந்த சென்றார்.
தொடர்ந்து, ஹரிஸ் கூறுகையில், நான் தவெக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக விஜயின் மக்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றேன். கடந்த வருடம் விஜய் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கினேன். கள்ளகுறிச்சி கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க தலைமையில் இருந்து அறிக்கை வந்தது. அதனால், நாங்கள் எல்லம் சேர்ந்து இளைஞர் அணி சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கினேன்.
ஆனால், கட்சியில் நடக்கும் தவறுகளை கேட்டால் கட்சிக்கு முரணாக நடப்பதாக கூறுவதா, இந்த பிரச்னைகள் குறித்து நான் தலைமைக்கு தெரிவித்தால், பொதுச்செயலாளர் என்ன பிரச்டின என கேட்டால் அதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் தருகிறேன். நான் கட்சி தலைமைக்கும், மாவட்ட அலுவலகத்திற்கு சென்றால் ஹரிஸ் என பெயரை கேட்டால், கேட்டை மூடிவிடுகிறார்கள்.
அவருக்கு நான் டிசைனர், என்னுடைய ஊர் கேஜிஎப்க்கு ஆனந்தை அழைத்து சென்று, 40 மன்றங்கள் திறந்து வைத்தோம். அப்போது ஹரிஸ் தெரியும், இப்ப ஆனந்த் சாருக்கு தெரியலையா, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன். எனக்கு எல்லாம் தலைவரு விஜய் சார்தான். நான் ஏன் எதற்கு ஆன்ந்த் சார் காலில் விழவேண்டும். கட்சியில உழைத்தவர்களுக்கு பதவி கொடுங்க, அதைவிட்டு யாரு உங்களுக்கு விசுவாசி யாகவும், பணம் கொக்கிறார்களோ அவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்து என்னை போன்று கட்சியில் உழைப்பவர்களை, செய்யாரிலிருந்து வந்துள்ள மாவட்ட செயலாளர் என்னை ஓதுக்கி வைத்து, சாதி ரீதியாக தன்னை தனிமைப்படுத்தி கட்சி பணியை செய்யாமல் தடுத்து வருகிறார், என்றார்.