திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், மேல்மணம்பேடு ஊராட்சியில் மறைந்த முன்னாள் தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் 72வது பிறந்த நாள் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட தேமுதிக துணை செயலாளர் புஜ்ஜி ஜெ.முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சத்யபிரியா முரளிகிருஷ்ணா முன்னிலை வகித்தார். இந்த பிறந்தநாள் விழாவில் திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விஜயகாந்த் உருவப்படத்தை திறந்து வைத்து, 1000 ஏழைகளுக்கு மாவட்ட துணை செயலாளர் புஜ்ஜி முரளிகிருஷ்ணன் பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கினார்.
இதில் தலைமை பொது குழு உறுப்பினர் பா.ரஜினிகாந்த், ஒன்றிய செயலாளர் ஹரிபாபு, அவைத் தலைவர் ராஜா, பொருளாளர் சதீஷ், துணைச் செயலாளர்கள் சேகர், தீனா, கிழக்கு ஒன்றிய பொருளாளர் செம்பரம்பாக்கம் சிவா, முன்னாள் அவைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் தாங்கள் உமாபதி, அகரமேல் ராஜா, மேப்பூர் மாரி, மகளிர் அணி செயலாளர் விஜயபாரதி, துணைச் செயலாளர் சுதாதனம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் திருமணம்பேடு சதீஷ் என்கிற சத்தியவேல், பாலா என்கிற உதயகுமார் ஆகியோர் நன்றி கூறினார்.