பெரியபாளையம், ஆக. 26: மறைந்த முன்னாள் தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் 72வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமார் தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியை வைத்து இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பி.சுகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் சிவகுமார், துணைச் செயலாளர் மோகன், நாராயணமூர்த்தி, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவை தலைவர் பாபு ராவ் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்கள் 1000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தேமுதிக மாவட்ட பிரதிநிதி முனுசாமிநகர் எம்.குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் டில்லி தலைமை தாங்கினார்.
கட்சி நிர்வாகிகள் எளாவூர் சங்கர், காட்டுக்கொள்ளை ஜெயவேல், பாபுராவ், ராஜேந்திரன், முனுசாமி, ராம்குமார், சாமுவேல் மூர்த்தி, ரமேஷ், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கிழக்கு மாவட்டச் செயலாளர் டில்லி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். திருத்தணி: திருத்தணி நகர தேமுதிக சார்பில் பைபாஸ்சாலை, காந்தி ரோடு, பெரியார் நகர், பேருந்து நிலையம், கமலா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு விஜயகாந்த் உருவப் படங்களுக்கு மலர்தூவி கேக் வெட்டி தேமுதிக நிர்வாகிகளுடன் இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.