அந்தியூர், ஆக.13: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டமான உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டு வழங்கும் விழா நடந்தது.
இதில் எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு 128 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டு வழங்கி சிறப்புரையாற்றினார். ‘‘இதில் அனைத்து இளைஞர்களும் கல்லூரி வரை படித்து வாழ்க்கையில் தங்களையும் உயர்த்தி, சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற உயர் நோக்கத்துடன் தமிழக முதல்வர் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இதனை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்’’ என்றார். கேட்டுக்கொண்டார். இதில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, பேரூர் கழகச் செயலாளர் காளிதாஸ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், பேரூராட்சி துணை தலைவர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், சிறுபான்மையின மாவட்ட தலைவர் செபஸ்தியான் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.