ஊத்தங்கரை, ஜூன் 24: ஊத்தங்கரை அருகே மேட்டுத்தாங்கல் கிராமத்தில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.
தொகுதி செயலாளர் சங்கத்தமிழன் சரவணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் பழனிச்சாமி, மணிகண்டன், தமிழரசு முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மனோஜ், அருண் மேதா, அஜித்குமார், முகாம் செயலாளர் ஜெய்சங்கர், திமுக ஒன்றிய துணை செயலாளர் பட்டாபி, அருணாச்சலம், அருள், தனராஜ், கேசவன், ஞானவேல், ராஜ்கமல், தேன்நிலவு, ஜீவன் பிரபு, குயில்தாஸ், திருலோகன், பர்கூர் காவேரி, கவி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரபாகரன் நன்றி கூறினார்.