பழநி, செப். 21: பழநி அருகே தொப்பம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், துருவன் ராசு ஆகியோர் தலைமை வகித்தனர். தொகுதி செயலாளர்கள் குமாரசாமி, முத்தரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் வரவேற்று பேசினார். முதன்மை செயலாளர் பாவரசு, துணை பொது செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் தமிழ்வாணன், துணை மண்டல செயலாளர் ஜலால்முகமது, மாவட்ட செயலாளர் திருவளவன், முதன்மை மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் தொப்பம்பட்டி ஒன்றியம், கீரனூர் பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.