நல்லம்பள்ளி,ஜூன்17: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம்புதூர் கிராமத்தில், இரண்டு தரப்பினர் சண்டை போட்டுக்கொள்வதாக, தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாரணைக்காக ஏட்டு சந்திரசேகர், பாளையம்புதூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது கரண்குமார்(25) மற்றும் சின்னசாமி(45) ஆகிய இருவரும், சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். அங்கு சென்ற போலீசார் அமைதியாக செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் அங்கிருந்த ராஜலிங்கம்(52) என்பவர், அங்கிருந்து செல்லாமல் விசாரணைக்கு வந்த ஏட்டுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, திடீரென ஏட்டு சந்திரசேகரை தாக்கிய அவர், கீழே தள்ள முயற்சித்தார். இதுகுறித்து ஏட்டு சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில், ராஜலிங்கத்தை தொப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு வந்த போலீஸ் ஏட்டு தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக்கு சென்ற ஏட்டை தாக்கியவர் கைது
0