விகேபுரம், ஆக. 7: விகேபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் மத்திய தெருவைச் சேர்ந்தவர் ராம்வேல். இவரது மகன் மன்(16). விகேபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி சிவந்திபுரத்திற்கு இரவு 8.30 மணிக்கு டியூசனுக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. 5 அடி உயரமுள்ள இவர் நீல நிற சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் விகேபுரம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கும்படி இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விகேபுரம் அருகே மாணவர் மாயம்
previous post