விகேபுரம், ஜூன் 18: விகேபுரத்தில் நகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரவீந்தர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகாஷ், நகரச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளரும் நகராட்சி தலைவருமான செல்வ சுரேஷ் பெருமாள் வரவேற்றார். கூட்டத்தில் இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரசாரம் நடத்துவது பூத் முகவர்கள் கூட்டம் நடத்துவது புதிய நிர்வாகிகளை பாராட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர துணை அமைப்பாளர்கள் அருள் பிரகாஷ், ஷாஜி, சிவக்குமார், பாலமுருகன், அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விகேபுரத்தில் நகர இளைஞரணி ஆலோசனை கூட்டம்
0
previous post