சென்னை: விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வாளகத்தில் வைப்ரன்ஸ் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, துணை தலைவர் சேகர்விஸ்வநாதன் சான்றிதழ்களை வழங்கினார். விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் வைப்ரன்ஸ் எனப்படும் கலை மற்றும் விளையாட்டு திருவிழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. முதல்நாள் விழாவை நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம்துபே தொடங்கி வைத்தார். இதனை முன்னிட்டு, கடந்த 15 நாட்களாக கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ஷிவம்துபே பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதைதொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர்கள் பென்னிதயாள், ஷெர்லி சேத்தியா ஆகியோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. விஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து மாம்பாக்கம் வரை நடைபெற்ற இந்த மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு, விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் சேகர்விஸ்வாதன் சான்றிதழ்களை வழங்கினார். இதைதொடர்ந்து, இரண்டாம் நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், மியூசிக் கிளப், டான்ஸ் கிளப் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், அறிஞர் அண்ணா தமிழ் மன்றத்தின் மாதிரி சட்டசபை நடத்தப்பட்டது. பிரபல பின்னணி பாடகர் சோனுநிகம் பங்கேற்ற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் சேகர்விஸ்வநாதன், இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களாக நடந்த கலை விழாக்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்….