ஈரோடு,ஆக.25: ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 மாணவர் மன்ற தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஜவஹர் கலந்துகொண்டார். மேலும் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மன்றத்தின் தலைவராக பிஎஸ்சி சிஎஸ்ஏ என்.காவியஸ்ரீ, துணைத் தலைவராக பிஎஸ்சி சிடிஎப் வி.கீர்த்தனா, பொதுச்செயலாளராக பிகாம் பிஏ சி.நிரண்யா, நுண்கலைச் செயலாளராக பிகாம் சிஏ எஸ்.ஸ்ருதி, உடற்கல்விச் செயலாளர் பிகாம் பிஏ ஆர்.கே.கமலநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு மன்றங்களின் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். விழாவில் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமையுரை வழங்கினார். கல்லூரி ஆலோசகர் பாலசுப்பிரமணியம் வாழ்த்தி பேசினார்.
நிர்வாக அலுவலர் எஸ். லோகேஷ்குமார் சிறப்புவிருந்தினர் அறிமுகவுரை வழங்கினார். முதல்வர் முனைவர்.சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கான பொறுப்புகள் கடமைகள் ஆகியவற்றை உணர்ந்து நிகழாக்கத்திறன் முடிவு எடுக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் மிகச்சிறந்த தொழில் முனைவோருக்கு உரிய தகுதிகளையும் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நிறைவாக ஆங்கில இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எல். மோகனசுந்தரி நன்றி கூறினார்.