செய்முறை மிக்சியில் வாழைப்பழத்தையும், வால் நட்ஸையும் சேர்த்து
நன்கு அரைக்கவும். பின் அதில் தேன், வெனிலா எசென்ஸ், பால் ஆகியவற்றை கலந்து
நன்கு அடித்து உடனே பரிமாறவும். வாழைப்பழம் கருத்துப்போகும். இது 2
நிமிடத்தில் செய்து முடிக்கும் ஒரு சத்தான மில்க் ஷேக். வாழைப்பழம் மிகுந்த
நார்சத்து உள்ளது. வால்நட்ஸில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஒமேகா-3
நிறைந்துள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு நல்லது. வால்நட்ஸ் நிறைய
குழந்தைகளுக்கு பிடிக்காது. இப்படி செய்து கொடுத்தால் ரசித்து
குடிப்பார்கள்.
வாழைப்பழ, வால்நட் மில்க் ஷேக்
90
previous post