மதுரை, ஜூலை 10: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாளுடன் சுற்றித்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் எஸ்ஐ சேதுராமன் போலீசாருடன் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு மீனாம்பிகை நகர் வழியாக ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாள் ஒன்றுடன் சுற்றித் திருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது ஜெய்ஹிந்த் புரம் ஜீவா நகர் 2வது தெரு இந்திரா நகரை சேர்ந்த அஜித்(26) என்று தெரிந்தது. இவர் பாண்டி என்பவரை கொலை செய்யும் திட்டத்தில் கிளம்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
48
previous post