திருப்புத்தூர், நவ. 14: திருப்புத்தூர் அருகே பரியாமருதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சேவுகன் (26). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளதால் இவரது மனைவி அவரது அம்மா வீட்டில் உள்ளார். இந்நிலையில் இவரது தாயாருக்கும், சேவுகனுக்கும் குடும்ப பிரச்னை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சேவுகன் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் தகவலின் பேரில், நெற்குப்பை போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
0