வானூர், ஜூன் 16: வானூர் தாலுகா கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் அரவிந்த்ராஜ் (24). கிரானைட் தரை போடும் தொழிலாளியான இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாளாம். இரவில் வீட்டில் தூங்க சென்றவர் ஓட்டு வீட்டின் முற்றத்தில் உள்ள கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வானூர் காவல் நிலையத்தில் தந்தை கணபதி அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த அரவிந்த்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகக்செட்டிகுளம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.